Pallavi
AdukinRaan YennuLLe Anandha Radhaiyodu
PaadukinRaan YennuLLae VeeNuGana kuzaluudhi ||
Anupallavi
KaaduMaedu kadandhuchenRu maadumaeththa KaNNanavan
Naadum adiyavarai aravaNaikkum KaNNanavan ||
CharaNam
Konjum sathangai thiruvadi aNindhaKaNNan
PinjukaalkaL thuukki nardhdhanam AdukinRaan
ThanjamenRu adipaNindhaal kadaikkaN paarppavan
Anjael yenRavan karam niitti kaappavan ||
பல்லவி
ஆடுகின்றான் என்னுள்ளே ஆனந்த ராதையோடு
பாடுகின்றான் என்னுள்ளே வேணுகான குழலூதி ||
அனுபல்லவி
காடுமேடு கடந்துசென்று மாடுமேய்த்த கண்ணனவன்
நாடும் அடியவரை அரவணைக்கும் கண்ணனவன் ||
சரணம்
கொஞ்சும் சதங்கை திருவடி அணிந்தகண்ணன்
பிஞ்சுகால்கள் தூக்கி நர்த்தனம் ஆடுகின்றான்
தஞ்சமென்று அடிபணிந்தால் கடைக்கண் பார்ப்பவன்
அஞ்சேல் என்றவன் கரம் நீட்டி காப்பவன் ||