Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி.
எண்ணத்தை நிறைவாக்கு மன-நிறைவு தந்திடு
உன்னதனே ராதாப்ரிய கிருஷ்ணா பேதை-என் ||
(எண்ணத்தை)
அனுபல்லவி.
தண்மைநிதம் தரும்நின் திருவருள் பொங்கிட-கடைக்
கண்பார் மதுசுதனா ஜனார்த்தனா கோவர்த்தனா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
"ஹரிஹரி கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா
ஹரிஹரி கோபிகா பேரானந்தா
ஹரிஹரி மீரா கான ப்ரேமா
ஹரிஹரி குருக்ஷேத்ர பரந்தமா" ||
(எண்ணத்தை)
சரணம்.
கருணாரஸ ஐயனேநின் ஸேவடி பணிந்தேன்யஎன்
அருகிருந்து அரவணைத்து நித்தமும்-எனை ஆண்டிடுஉனை
ஒண்டிடும் தாஸன் உளம்வாழ் மெய்யனே கிருஷ்ணா
கண்ணிரங்கி அருள்வாய் தேவகி மைந்தா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்.
"ஹரிஹரி கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா
ஹரிஹரி கோபிகா பேரானந்தா
ஹரிஹரி மீரா கான ப்ரேமா
ஹரிஹரி குருக்ஷேத்ர பரந்தமா" ||
(எண்ணத்தை)