Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
ஏழரைக் கொல்லம் நீபடுத்தும் தொல்லைபோதும்
ஏழை எனக்கருள உளம்கனிவாய் சனீஸ்வரா ||
(ஏழரை)
அனுபல்லவி
தொழுதேன் நாளும்உனை ஜெகம்புகழ் ஈஸ்வரா-மனம்
குழைந்து கானம்பாடி ஸ்தோத்திரம் செய்தேன்
ஸாஹித்ய சிட்டாஸ்வரம்
பஞ்சணை மீதமர்த்தி வெண்சாமரம் வீசி
தஞ்சம் புகுந்து ஆரத்தி எடுத்தேன்
கஞ்சனும் வஞ்சகனும் நீஇல்லை ஐயனே-என்
நெஞ்சம் அமர்ந்து நல்லருள் நீதா ||
(ஏழரை)
சரணம்
கொஞ்சமா நஞ்சமா நீபடுத்தும் பாடு
பஞ்ச பூதமும்உன் பேர்கேட்டு நடுங்குமே
இனிபோதும் சங்கடம் உன்தாஸன் ஆனேன்
இனிதாய் நீஅருள க்ருபைபுரி ஈஸ்வரா
ஸாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(ஏழரை)