Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
தனிமையில் உன்எண்ணம் நிழலாடுதே கண்ணா
இன்னமுது நான்தருவேன் அருகுவா கண்ணா ||
(தனிமையில் உன்எண்ணம்)
அனுபல்லவி
மென்பாத சுவடிஎன் உள்ளமது கண்டேன்
சின்னஞ்சிறு கையளைந்து அவில்உண்ணக் கண்டேன்
சாஹித்ய சிட்டாஸ்வரம்
கட்டிக் கரும்பே செல்லக்குட்டியே கண்மணிகண்ணா-உனை
தொட்டிலிட்டு அடிதொட்டிட மட்டிலா கொண்டாட்டம்-கால்
கட்டைவிரல் சப்பிடும் கட்டழகா க்ருஷ்ணா-நின்படு
சுட்டித்தன அட்டகாச லீலைகண்டு உடல்சிலிர்த்தேன் ||
(தனிமையில் உன்எண்ணம்)
சரணம்
கள்ளமாய் கண்பொத்தி வம்புசெய்யும் வண்ணா-என்
உள்ளமெனும் கோவிலில் நீஅமர இடம்தந்தேன்
இராப்பகல் தொழுதேன்திரு அருளமுது தாக்ருஷ்ணா
மீராவின் கிரிதரா கானப்ரிய முரளிதரா
சாஹித்ய சிட்டாஸ்வரம் ||
(தனிமையில் உன்எண்ணம்)