Pallavi
Ragam: Kethaaram
Kolaattam Adiduvoam kolaakala thiruNaaL inRu
kalakala-ena vaLaikulunga Vinaayagan pugazpaadi ||
(Kolaattam)
CharaNam 1.
Kolamayil vaaganan veRRi vadivaelan
Muruganpriya Sodharan eNaiyadi nidhamthuthiththu
"JeyaJeya SriGaNesha Ganarasiha guNasiilaa
Naadhaprumma Sathyaprema SriGaNesha charaNamenRu" ||
(Kolaattam)
CharaNam 2.
Ragam: NaattakkuRinji.
Saelaiyuur vaaSan-en Kulajothi Vinayagan
alaipaayum-en uLLaththil mana-nimmadhi aruLpavan
"JeyaJeya SriGaNesha Ganarasiha guNasiilaa
Naadhaprumma Sathyaprema SriGaNesha charaNamenRu" ||
(Kolaattam)
CharaNam 3.
Ragam: Hamsadhwani.
Nalamum vaLamum-en naaLum thantharuLum
Valampuri Vinayaganai valamvanthu thyaaniththu
"JeyaJeya SriGaNesha Ganarasiha guNasiilaa
Naadhaprumma Sathyaprema SriGaNesha charaNamenRu" ||
(Kolaattam)
CharaNam 4.
Ragam: Ranjani.
aingara dhivyaruupa oangaara naadhaa
niilakaNtan priya Shakthipre maanandhaa
"JeyaJeya SriGaNesha Ganarasiha guNasiilaa
Naadhaprumma Sathyaprema SriGaNesha charaNamenRu" ||
(Kolaattam)
CharaNam 5.
Ragam: Raamapriyaa.
lambhodhara Vignaraajaa VakkrathuNtaa nama:enRu
adhimathura thirunaamam SmaraNam-en naaLumcheythaen
"JeyaJeya SriGaNesha Ganarasiha guNasiilaa
Naadhaprumma Sathyaprema SriGaNesha charaNamenRu" ||
(Kolaattam)
பல்லவி
ராகம்: கேதாரம்.
கோலாட்டம் ஆடிடுவோம் கோலாகல திருநாளஇன்று
கலகலஎன வளைகுலுங்க வினாயகன் புகழ்பாடி ||
(கோலாட்டம்)
சரணம் 1.
கோலமயில் வாகனன் வெற்றி வடிவேலன்
முருகன்ப்ரிய ஸோதரன் இணையடி நிதம்துதித்து
"ஜெயஜெய ஸ்ரீகணேஷா கானரஸிஹ குணசீலா
நாதப்ரும்ம சத்யப்ரேம ஸ்ரீகணேஷா சரணமென்று" ||
(கோலாட்டம்)
சரணம் 2.
ராகம்: நாட்டக்குறிஞ்சி.
சேலையூர் வாஸன்-என் குலஜோதி வினாயகன்
அலைபாயும்-என் உள்ளத்தில் மன-நிம்மதி அருள்பவன்
"ஜெயஜெய ஸ்ரீகணேஷா கானரஸிஹ குணசீலா
நாதப்ரும்ம சத்யப்ரேம ஸ்ரீகணேஷா சரணமென்று" ||
(கோலாட்டம்)
சரணம் 3.
ராகம்: ஹம்ஸத்வனி.
நலமும் வளமும் எந்நாளும் தந்தருளும்
வலம்புரி வினாயகனை வலம்வந்து த்யானித்து
"ஜெயஜெய ஸ்ரீகணேஷா கானரஸிஹ குணசீலா
நாதப்ரும்ம சத்யப்ரேம ஸ்ரீகணேஷா சரணமென்று" ||
(கோலாட்டம்)
சரணம் 4.
ராகம்: ரஞ்சனி.
ஐங்கர திவ்யரூப ஓங்கார நாதா
நீலகண்டன் பிரிய சக்திப்ரே மானந்தா
"ஜெயஜெய ஸ்ரீகணேஷா கானரஸிஹ குணசீலா
நாதப்ரும்ம சத்யப்ரேம ஸ்ரீகணேஷா சரணமென்று" ||
(கோலாட்டம்)
சரணம் 5.
ராகம்: ராமப்ரியா.
லம்போதர விக்னராஜா வக்ரதுண்டா நம:என்று
அதிமதுர திருநாமம் ஸ்மரணம்-எந் நாளும்செய்தேன்
"ஜெயஜெய ஸ்ரீகணேஷா கானரஸிஹ குணசீலா
நாதப்ரும்ம சத்யப்ரேம ஸ்ரீகணேஷா சரணமென்று" ||
(கோலாட்டம்)