Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
முருகா அஷ்டபதி
ராகமாலிகா. தாளம் : ஆதி
இயற்றியவர்:கானசரஸ்வதி
1.ராகம் : பாஹேஸ்வரி
முருகா ஷண்முகா சிவசக்தி குமரா
வரவேண்டும் தரவேண்டும் அனுக்ரகம் அனுதினமும்
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
2.
சர்வேஸ்வரன் நெற்றிக்கண் பொறிச்சுடர் அவதரித்த
சரவண பாலா கார்த்தி கேயா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
3. ராகம் : வாசஸ்பதி
சக்தியின் அருள்பெற்று வடிவேலை கரம்தாங்கி
சூரனைஸம் ஹரித்த சுப்ர மண்யா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
4. ராகம் : பஹுதாரி
ஞானப் பழமே ஞானப் பண்டிதா
ஆண்டிக்கோலம் ஏனைய்யா பழனிவாழ் முருகய்யா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
5. ராகம் : வஸந்தா
தெய்வானைக் கரம்பற்றித் திருப்பரங்குன் றமமர்ந்த
தேவசேனா பதியனே திருவருள் கனிந்திடு
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
6. ராகம் : வலச்சி
துள்ளித்துள்ளி ஓடும்மான் வயிற்றுப் பிறந்த
வள்ளி மணாளா புள்ளிமயில் வாகனா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
7. ராகம் : ஸுபபந்துவராளி
தண்டபாணித் தெய்வமே ஸ்வாமி நாதா
வள்ளி காந்தா கந்தாஎன் குருநாதா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா"||(முருகா)
8. ராகம் : சக்ரவாகம்
தஞ்சமடைந்த எனக்குஇனி சஞ்சலமில்லை முருகா
பஞ்சாம்ருத ஆனந்தா செஞ்சடையோன் குமரா
"ஹரோஹரா முருகா ஓம்சர வணபவா
வெற்றிவேல் முருகா வள்ளிகான ஆனந்தா" || (முருகா)