Pallavi
KaruNai Deivamae varuvaai varuvaai
Karimuga varadhaa nii varuvaai varuvaai ||
(KaruNai Deivamae)
Anupallavi
KallenRoli ezhuppum chilampaNindha paadhaa
KadaikkaN viichchilae ulagaaLum naadhaa
ChittaaSwaram
, S m g m D d n s D d n s | , S s n d N | n d m G r s n ||
 smgrsn  mndmgr  smgr | sn  r S n s n | , d n D m g r || , n =
(KaruNai Deivamae)
CharaNam
ThaNNoLi viisum unnoLi mugamae
KaNNaara kaNdaal Ganam yezhumae 
aNNalae Enthalae Vasantha Swaruupiyae
puNpatta uLLamadhai kaaththidum vaezhavanae
ChittaaSwaram   ||
(KaruNai Deivamae)
பல்லவி
கருணைத் தெய்வமே வருவாய் வருவாய்
கரிமுக வரதாநீ வருவாய் வருவாய் ||
(கருணைத் தெய்வமே)
அனுபல்லவி
கல்லென்றொலி எழுப்பும் சிலம்பணிந்த பாதா
கடைக்கண் வீச்சிலே உலகாளும் நாதா
சிட்டாஸ்வரம்
, ஸா ம க ம தா த நி ஸ தா த நி ஸ | , ஸா ஸ நி த நீ | நி த ம கா ரி ஸ நி ||
ஸ ம க ரி ஸ நி ம நி த ம க ரி ஸ ம க ரி | ஸ நி ரி ஸா நி ஸ நி | , த நி தா ம க ரி || , நி =
(கருணைத் தெய்வமே)
சரணம்
தண்ணொளி வீசும் உன்னொளி முகமே
கண்ணார கண்டால் கானம் எழுமே 
அண்ணலே ஏந்தலே வசந்த ஸ்வரூபியே
புண்பட்ட உள்ளமதைக் காத்திடும் வேழவனே
சிட்டாஸ்வரம்   ||
(கருணைத் தெய்வமே)   
 
O! Lord of Mercy! O! Lord with an Elephant face! Please come to me and bestow your grace.
Naadhaa (Hero/Leader of the Universe)! He who wears the tinkling anklet ornaments on his 
feet. He who governs the universe under his sight. Annalae (Eminent God)! Yaendalae 
(Great Supporter)! Vasantha Swarupiyae (Form of Fragrant Spring)! Vezhavanae (another 
name for the elephant faced Ganesha)! Protector of the wounded soul! My mind nourishes 
song (Ganam) for you. I sing your glory when I look at your moon like face.O! Mercyful 
God Vinayaka! Please come! Please come! Bestow your Mercy!