பல்லவி
பண்ணிசை ஆனந்தா வேய்ங்குழல் கானமோஹா
மண்ணுண்ட மாதவா க்ருஷ்ணா சரணம் ||
(பண்ணிசை ஆனந்தா)
அனுபல்லவி
கிண்கிணிநாத தண்டையணி பதநிழல் ஒன்றுவேண்டி
தண்டனிட்டு பற்றினேன்நின் புண்டரீக ஸேவடி ||
(பண்ணிசை ஆனந்தா)
சரணம் 1
அண்டிஉனை வேண்டினேன்என் மண்டைக்கனம் நீங்கிட
மண்டியிட்டேன் பொறுமை தன்னடக்கம் வளர்ந்தோங்க
சுண்டுவிரல் குன்றுதாங்கும் கொண்டல்மணி வண்ணாகாளிங்க
தாண்டவா காண்டீபன் தேரோட்டியேஎன் தீர்க்கதரிசி||
(பண்ணிசை ஆனந்தா)
சரணம் 2
ஆணவம்நிதம் துடைத்து தணிவுபணிவு நிறைந்து
தன்னலம்எனை விட்டகன்று தர்மசிந்தைஎன் உளம்பொங்கி
தானஉபகார அன்புபணி என்னில்நாளும் பெருகிடநின்
அருள்பிச்சை வேண்டிநின்னடி பிணைந்து ஒண்டினேன் ||
(பண்ணிசை ஆனந்தா)