Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
1. லக்ஷ்மி தேவி சரணம் மஹா
2. லக்ஷ்மி தேவி சரணம் அஷ்ட
    லக்ஷ்மி தேவி சரணம் சரணம்
    கல்யாண குணசீலி ஹரிப்ரேம கானப்ரியே || 
   (லக்ஷ்மி தேவி)
சரணங்கள்
1.  புஷ்ப அலங்காரி ஸ்ருங்கார மோஹினி
    சாஷ்டாங்க நமஸ்காரம் அம்பிஹே ஈஸ்வரி || 
    (லக்ஷ்மி தேவி)
2.  ஆதி லக்ஷ்மி கஜவீர லக்ஷ்மி
    கதியம்மா நின்னடி ஸ்ரீதேவி அருள்புரி || 
    (லக்ஷ்மி தேவி)
3.  தனதான்ய சந்தான சௌபாக்ய லக்ஷ்மி
    நாராயணன் ஆனந்தி என்ஹ்ருதய வாஸி || 
    (லக்ஷ்மி தேவி)
4.  பரிபூர்ண ஐஸ்வர்ய ஸ்ரீவித்யா லக்ஷ்மி-நின்
    ஆசிநிதம் வேண்டும் ஸ்ரீவிஜய லக்ஷ்மி || 
    (லக்ஷ்மி தேவி)
5.  நான்காணும் பொருளெல்லாம் உன்னுரு கண்டேன்
    அகமகிழ்ந்து எனைமறந்தேன் அம்பிஹே ஈஸ்வரி || 
    (லக்ஷ்மி தேவி)
6.  வையகம் போற்றிப்புகழும் என்-ஆத்ம ஸ்ரீஜோதி
    வைபோக வைஷ்ணவி வைகுண்ட வாஸி || 
    (லக்ஷ்மி தேவி)