1.
ஞானகூத்தன் சக்தியே சர்வலோக அம்பிஹே
ஆனந்த தாண்டவன் சபேசன்மன மோஹினியே
அனவரதம் படைத்தல் காத்தல் அழித்தல்
மறைத்தல் அருளல்வல்ல மாதொரு பாகன்ப்ரியே
அரவுகங்கண ருத்ரவீணா அதிமேதாவி சிந்தைகுளிர்
சிங்க வாஹன மங்கள நாயகி
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
2.
பரமசுக ராகரத்னாங்கி ஜோதி ஸ்வரூபிணிநீ
நாகநந்தினியே ரூபவதிநீ நவநீத ஸ்வர்ணாங்கிநீ
காமவர்த்தினியே திவ்யமணிநீ சூர்யகாந்த கௌரிமனோஹரி
கலைவள ஷ்யாமளாங்கியே ராமப்ரிய த்ரிசூலினிநீ
சத்யதர்ம வதியேஅருள் வருணப்ரியே ஹேமாவதிநீ
கலைலோக சஞ்சாரியே ஸங்கீத நாதப்ரும்மம்நீ
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
3.
நிச்சியம் சொல்வேன்என் மனதிறந்து அம்மா
நிறைவுதரும் நிம்மதிநீ தர்மஅற சிந்தைநீ
விதிவெல்லும் மதிநீ மேன்மைதரும் நம்பிக்கைநீ
என்அஞ்சா நெஞ்சம்நீ அடியேன்என் ஆசான்நீ
என்அம்மைநீ அப்பன்நீ நிதம்கரம்தரும் உபகாரிநீ
என்நித்யானந்த செல்வம்நீ என்அறிவின் வெளிச்சம்நீ
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
4.
மனதுக்கும் உடலுக்கும் உற்சாகமூட்டும் இனிப்பானாயம்மா
அதர்மம்நாளும் வளரக்கண்டுஎன் மனம்கொந்தளித்து கசந்ததம்மா
கரம்தந்துஎனை நீஅணைப்பது சுவையைக்கூட்டும் புளிபோலம்மா
பக்தியில்லா சரீரமோ உப்பில்லா பண்டம்போலம்மா
காரசாரபேச்சு வெறுத்தேன்என்னில் அன்புஓங்கிட அருளம்மா
துவர்ப்பின் தேவைபோல்நிதம் சமத்துவநிலை வேண்டினேனம்மா
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
5.
அற்புதம் நான்காணஉளம் இரங்கினாயோ காருண்யசீலி
பயந்தானோ அசுரன்நின் கோபக்கனல் தாங்காது
வீரவாகை சூடினாய்அம்மா மஹிஷனை ஒழித்து
லோகஅவலம் துடைத்து மகிழ்ச்சி தந்தாய்அம்மா
கண்டேன்ஹாஸ்ய மலர்முகம் கொண்டேன் இன்பம்அம்மா
நவரச அலங்காரியே சந்த்ரவதன சாந்தரூபீ
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
6.
இந்துவாழ் சடையான்ப்ரியே சங்கட நிவாரிணி
என்பக்தியின் சக்தியே சங்கட நிவாரிணி
என்சிந்தையின் சந்தனமே சங்கட நிவாரிணி
என்ஆத்ம சுவாஸியே சங்கட நிவாரிணி
என்சகலகார்ய காரணியே சங்கட நிவாரிணி
ஜெகலோக ரக்ஷ்க்ஷகியே சங்கட நிவாரிணி
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
7.
மெய்களிக்குது அம்மாநின் த்யானத்தில் எனைநான்மறக்க
மெய்சிலிர்க்குது அம்மாநின் புனிதநாம நித்யஸ்மரணம்
மெய்உறைக்குது அம்மாநின் காட்சியேஎங்கும் எனக்குத்தோன்ற
மெய்குளிருது அம்மாநின் புகழ்கீதம்நிதம் நான்கேட்க
மெய்மணக்குது அம்மாநின் மெய்ஞானவழி நான்நடக்க
மெய்மறக்குது அம்மாநின் ஸ்பரிசபதம் நான்வருட
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
8.
தெய்வீக வழியிலேநிதம் நான்நடக்க க்ருபைபுரி
தெய்வீக சிந்தையிலே நான்மணக்க க்ருபைபுரி
தெய்வீக த்யானத்திலே நான்மலர க்ருபைபுரி
தெய்வீக ஞானத்திலே நான்வளர க்ருபைபுரி
தெய்வீக அருள்நலத்திலே நான்ஓங்க க்ருபைபுரி
தெய்வீக அனுபவத்திலே என்மெய்குளிர க்ருபைபுரி
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
9.
வைரஒட்டி யாணமேநின் இடுப்பை நெறுக்கிட
முத்து குண்டலமோநின் காதுஇழுத்து தொங்கிட
ரத்னகல் ஆபரணமோநின் உடலின்கனம் பெருக்கிட
தங்கவளையல் பெருக்கமோ கைவலி ஓங்கிட
இனியும்நான் காணசகியேன் பக்தர்தரும் தொல்லைதனை
மென்மைதரும் மலர்கொண்டுஉனை சிங்காரித்து மகிழ்வேன்
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||
10.
ஜென்மமோ தந்தாய்நான் எழுதியபாடலில் நின்அருள்சுரக்க
ஜென்மமோ தந்தாய்நிதம் இசைஆரம்நான் உனக்குசூட்ட
ஜென்மமோ தந்தாய்நின் வேதநாதத்தில் நான்நனைந்திட
ஜென்மமோ தந்தாய்சதா நின்நாமம்பிதற்றி எனைமறந்திட
ஜென்மமோ தந்தாய்நின் பக்தியில்நான் கரைபுரள
ஜென்மமோ தந்தாய்தொந்தி கணபதிமாதே உனைவர்ணிக்க
காயகப்ரியே நாடகப்ரியே கோகிலப்ரியே யோகப்ரியே
ரிஷபப்ரியே ஷண்முகப்ரியே சாமகான ரஸிஹப்ரியேசரண் ||