Sample Chitta swaram
. . .
g R - s n d p m - d P - m g r s n | , m g r s n d p | m g r - g m p d n ||
பல்லவி
தரிசனம் காணும்பெரும் பாக்யம் தந்தாய்
குருக்ஷேத்ர ஸ்ரீக்ருஷ்ணா பக்த வத்ஸலா ||
(தரிசனம் காணும்)
அனுபல்லவி
பாரதம் எழுதினாயோவேத வியாசன்விரைந்து சொல்லசொல்ல
பக்தருளம் பதித்தாயோஹரி கேசவன்மகிமை வினாயகா ||
(தரிசனம் காணும்)
சரணம் 1
(சஹாதேவன் க்ருஷ்ணரது விஸ்வரூபம் காணல்)
தூதுநீ சென்றாலென்ன போர்மூண்டால் எனக்கென்ன
எல்லாம் அறிந்தகண்ணா போதும்உன் திருவிளையாடல்
ஓம்நமோ நாராயணா ஓம்நமோ நாராயணாஎன
கரம்குவித்த இந்தசஹாதேவன் கண்ணாரகண்டு களிக்கநின் ||
(தரிசனம் காணும்)
சரணம் 2
(துரியோதனன் சபை தூதுசென்ற க்ருஷ்ணரது விஸ்வரூபம்)
கண்ணா தூதாய்வந்த உனைசிறைதள்ளவோ நினைத்தான்
தர்மசிந்தை கெட்டஅந்த மூடன்துரி யோதனன்
விதுரனும்வில் ஒடித்தான் பீஷ்மரும் கொந்தளித்தான்
நல்லபாடம் கற்பித்தாய் சிறைவிட்டு விரைந்தெழுந்து ||
(தரிசனம் காணும்)
சரணம் 3
(அர்ச்சுனனுக்கருளிய கீதைஉபதேச க்ருஷ்ணர் விஸ்வரூபம்)
எப்படிநான் கொல்வேன் என்சுற்றம் கண்ணாஎன
மதிமயங்கி செயலிழந்த அர்ச்சுனனுக் கிரங்கினாயோ
தெய்வசிந்தை நாளும்பெருகி கண்ணன்பதம் சரண்புகுந்து
அஹிம்சைவழி நின்றிடகீதா உபதேசம் செய்தாயோ ||
(தரிசனம் காணும்)
சரணம் 4
(கர்ணன் க்ருஷ்ணரது விஸ்வரூபம் காணல்)
சூரியதேவன் அனுக்ரக பராக்ரமவீர கர்ணா-கவச
குண்டலமா தானம்செய்தாய்அந்த யாசகன்இந் திரனுக்குஅன்னை
குந்திகேட்ட இருவரமும் மனமுவந்து அருளிநின்
தர்மபலனும் தாரைதந்து கண்ணன்உளம் கவர்ந்தாயோ ||
(தரிசனம் காணும்)
சரணம் 5
(விஸ்வரூப க்ருஷ்ணர் ஸ்துதி)
சர்வம் க்ருஷ்ணமயம் கோலோக ஸ்ரீ நாதா
சர்வம் க்ருஷ்ணமயம் ராஸலீல நர்த்தனா
சர்வம் க்ருஷ்ணமயம் துவாபரயுக திலகா
சர்வம் க்ருஷ்ணமயம் பரிபூர்ண அவதாரா
சர்வம் க்ருஷ்ணமயம் வேதஸார புனிதா
சர்வம் க்ருஷ்ணமயம் தர்மசத்ய ஸ்தாபகா
சர்வம் க்ருஷ்ணமயம் பாகவதகுரு நாதா
சர்வம் க்ருஷ்ணமயம் கீதகோவிந்த ஆனந்தா ||
(தரிசனம்காணும்)