பல்லவி
மயில்மீது அமர்ந்துவரும் திருக்காட்சி நான்காண
மனமிரங்கு முருகா சக்திவடி வேலா ||
அனுபல்லவி
என்சிந்தை நீ(குடி)இருக்க கோயில்நாடி வரவேண்டுமோ
எனைஆளும் கந்தா...... முருகா.....ஷண்முகா.....குமரா....
எனைஆளும் கந்தா வள்ளிதெய்வானை மணாளா
சிட்டாஸ்வரம்
மா , பா த ப த நீ , நி த தா ம | கா, ஸா ரீ க | மா , ப நி தா ம ||
பா ; , ப த நி ஸ ரி க ம - ம க - க ஸ | , ஸ நி - நி த - த மா | , மா க - கா ஸா ||
(மயில்மீது)
சரணம்
ஹரோஹரா முருகா ஹரோஹரா எனமுழங்கி
ஹரன்மைந்தா நின்னடி சரணடைந்தேன் அனுதினம்
தரிசனம் வேண்டி நின்றேன் திருவுளம் கனியாதா
முருகா.......ஷண்முகா......குமரா......
தரிசனம் வேண்டி நின்றேன் திருவுளம் கனியாதா
கரிமுகன் ஸோதரா கானப்ரிய ஸ்வமிநாதா
சிட்டாஸ்வரம் ||
(மயில்மீது)
Muruga! Shakthi Vadi Vela (one who holds the powerful spear)!
Bless me and show me your avatar on the peacock vehicle. Shanmuga!
Kumara! O! My Protector! Kandha! Husband of Valli and Deivaanai!
Son of Shiva! I surrender at your feet everyday for shelter and chant
“Haro Hara Muruga Haro Hara”. You are the brother of the elephant
faced God Ganesha. Swaminaadhaa! Gana Priya ( Lover of Music)!
There is no need for me to visit a temple since You always reside
in my heart. I always hope to see find you . Won’t you feel
sympathy for me and show me your appearance?